Friday, January 3, 2025

அந்தப் பழக்கத்தால் வந்த வினை..முதல் முறையாக மனம் திறந்த ரோபோ ஷங்கர்…

கலகலப்பாக காமெடி செய்து மக்களை சிரிக்க வைத்து வந்த ரோபோ ஷங்கர், கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென உடல் எடை குறைந்து ரசிகர்களை கலங்க வைத்தார்.

இதற்காக பல காரணங்கள் கூறப்பட்டு வந்த நிலையில் முதல் முறையாக ஒரு பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார் ரோபோ ஷங்கர்.

படம் ஒன்றிற்காக உடல் எடை குறைக்க டயட்டில் இருந்ததாகவும், அப்போது மஞ்சள் காமாலை நோய் தாக்கியதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவர் பகிர்ந்துள்ளார்.

தன்னுடைய குடிப்பழக்கத்தினால் தான் உடல்நிலை மோசமடைந்ததாக பல செய்திகள் வலம் வந்ததை பார்த்ததாகவும், முன்னொரு காலத்தில் அது போன்ற பழக்கத்தில் இருந்தது உண்மை தான் எனக் கூறியுள்ளார்.

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். அதனால், நான் செய்த தவறுகளை யாரும் செய்ய வேண்டாம் எனவும், கமெண்ட் போட முடியும் என்பதற்காகவே ஒருவரை பற்றி அவதூறாக புண்படுத்தும் வகையில் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest news