அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2016-ம் ஆண்டு வெளியான ‘தெறி’ திரைப்படம், 10 ஆண்டுகளுக்குப் பிறகு விரைவில் மீண்டும் திரைக்கு வரவுள்ளதாகத் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அறிவித்திருந்தார்.
விஜய்யின் மாஸ்டர், லியோ படங்களை ரீ-ரிலீஸ் செய்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தெறி படமும் வரும் ஜனவரி 15ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படும் என 2 நாட்களுக்கு முன்பு படக்குழு அறிவித்தது. இந்நிலையில், தெறி படத்தின் ரீ-ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
