இயக்குநர் மாருதி இயக்கத்தில் நகைச்சுவை, ஆக்ஷன், ஹாரர் பாணியில் கடந்த ஜன. 9 ஆம் தேதி உலகம் முழுவதும் தி ராஜா சாப் திரைப்படம் வெளியானது. பிரபாஸ், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரிதி குமார், சஞ்சய் தத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
உலகம் முழுவதும் தி ராஜா சாப் திரைப்படம் முதல் நாளே ரூ.112 கோடி வசூலித்து சாதனை படைத்தது. 4 நாள்களில் ரூ. 201 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகப் படக்குழு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, தி ராஜா சாப் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
