சிங்கபூருக்கு சொந்தமான புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன், PSLV C55 ராக்கெட் இன்று மதியம் விண்ணில் பாய்கிறது…

223
Advertisement

நாட்டுக்குத் தேவையான தகவல் தொடர்பு, தொலையுணர்வு மற்றும் வழிகாட்டு செயற்கைக்கோள்களை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்கள் மூலம் விண்ணில் செலுத்தி வருகிறது.

இஸ்ரோ வணிக ரீதியாகவும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்துகிறது. அந்த வகையில் சிங்கபூருக்குச் சொந்தமான டெலியோஸ்-2 எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கு, இஸ்ரோ புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

அதன்படி, சிங்கபூருக்கு சொந்தமான புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன், PSLV C55 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது. PSLV C55 ராக்கெட் இன்று மதியம் 2:19 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.