ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 10:18:30 மணிக்கு சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. -சி62 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில் தற்போது அது தோல்வி அடைந்துள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவித்துள்ளார்.
ராக்கெட்டின் 3 வது நிலையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டம் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவித்துள்ளார். மேலும் இது குறித்து விரிவான ஆய்வு தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
