Saturday, March 15, 2025

இன்னும் ஒரு சில மாதங்களில் தங்கம் விலை இது தான்! அந்த ஒன்று மட்டும் நடந்தால் தங்கம் விலை சரிந்துவிடும்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்த அதிரடி கொள்கை முடிவுகளால் பொருளாதார மந்தநிலை உருவாக கூடும் என்ற பயமுறுத்தும் சூழலால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிக்கலாம் என்று சொல்லப்பட்டது. இந்த நிலையில் இன்று சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,000 டாலரை கடந்து விற்பனையாகிறது. இது தங்கத்தின் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத உச்சம் என்று கூறப்படுவது நடுத்தர மக்களை கலங்க வைப்பதாகவே இருக்கிறது.

இந்நிலையில் தங்கத்தை இப்போதே வாங்கலாமா அல்லது காத்திருந்தால் விலை குறைய வாய்ப்பிருக்கிறதா என்பது குறித்து தங்க நகை வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் கோல்டு குரு. சாந்தகுமார் ஒரு இணையதளத்துக்கு அளித்துள்ள பேட்டியில் அவர்

தங்கத்தின் விலை வரும் நாட்களில் தொடர்ந்து அதிகரிக்கவே செய்யும் என்பதால் தேவை இருப்பவர்கள் இப்போதே வாங்கலாம் எனவும் 2025ம் ஆண்டு முடிவடைவதற்குள் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.80,000 வரையும் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.10,000 வரையும் எட்டக் கூடும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் ஒரு சில காரணங்களால் தங்கத்தின் விலை குறையலாம் என்றாலும் அது எப்போது நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது எனவும் மேலும் அது தற்காலிக சரிவாக தான் இருக்கும் எனவும் அதாவது இந்திய பங்குச்சந்தைகள் வீழ்ச்சியிலிருந்து மீண்டு உச்சம் எட்டும்போது முதலீட்டாளர்கள் அங்கு முதலீட்டை குவிக்கும் பட்சத்தில் தங்கத்தின் விலை குறைய வாய்ப்பிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர் ‘அதே நேரத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தற்போது 87 ரூபாயாக இருக்கிறது. இதன் மதிப்பு ரூ.80 ஆக குறையும்போது போது தங்கத்தின் விலை சரியலாம் என்றாலும் எப்போது ரூபாய் மதிப்பு உயரும் என்று தெரியவில்லை. மட்டுமல்லாமல் சர்வதேச நாடுகள் தங்களின் கையிருப்பில் உள்ள தங்கத்தை விற்பனை செய்யும் போது தங்கத்தின் விலை வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளது’ என தெரிவித்துள்ளார்.

இந்த தொகுப்பு ஒரு செய்தி மட்டுமே இதை கண்டிப்பாக முதலீட்டுக்கான ஆலோசனையாக எடுத்துக்கொள்ள கூடாது என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Latest news