Sunday, June 15, 2025

ரூ.62 ஆயிரத்தை நெருங்கிய தங்கத்தின் விலை

நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, ரூ.61,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. இந்த நிலையில் மாதத்தின் தொடக்க நாளான இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.61,960 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.7,745-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.4,640 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news