உச்சத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வருவது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வார தொடக்க நாளான இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,285-க்கும் சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.66,280-க்கும் விற்பனையாகிறது.
ஒரு கிராம் வெள்ளி ரூ.103-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை மூன்று நாட்களில் சவரனுக்கு ரூ.2,200-க்கு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.