சுரங்கப்பாதை வழியாக விமானத்தை ஓட்டிச்செல்லும்
வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த சாதனையை நிகழ்த்தியிருப்பவர் இத்தாலிய
விமானி டாரியோ கோஸ்டா.
இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா…?
வழக்கமாக நீண்ட திறந்தவெளி கொண்ட ஓடுதளத்தில்
சிறிதுதூரம் பேருந்தைப்போல் தரையில் ஊர்ந்துசென்று
வேகம் அதிகரித்தபின் சற்று சாய்வாக மேல்நோக்கி
எழும்பி பறந்துசெல்லும். ஆனால், குறுகலான
சுரங்கப்பாதைகளை ஓடுதளமாகப் பயன்படுத்தி
விமானத்தைப் பறக்கச் செய்திருப்பது கின்னஸ்
சாதனையாகி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இரண்டு இறக்கைகள் மட்டுமே கொண்ட சிறிய
விமானம் ஒன்றை துருக்கி நாட்டின் முக்கிய
நகரங்களுள் ஒன்றான இஸ்தான்புல் நகரின்
கதல்கா மாவட்டத்தில் உள்ள குறுகலான இரண்டு
சுரங்கப்பாதைகள் வழியாக இயக்கி கின்னஸ் சாதனை
படைத்துள்ளார் டாரியோ.
2.26 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த சுரங்கப் பாதைகள்
வழியே 245 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து
44 விநாடிகளுக்குள் கடந்துசென்றுள்ளார்.
சாதனைபுரிந்த தங்கள் நாட்டு பைலட் டாரியோ
கோஸ்டாவை இத்தாலி மக்கள் பாராட்டி மகிழ்ந்து
வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.