Thursday, December 26, 2024

14 ஆண்டுகளாக ஏர்போர்ட்டில் தங்கிய நபர்…வீட்ல இப்படி ஒரு சிக்கலா !

சீனாவின் பெய்ஜிங் நகரில் உள்ள கேபிடர் சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 2ல் 14 வருடங்களாக வசித்து வருகிறார் வெய் ஜியாங்குவா  45 வயது இருந்தபோது விமான நிலையத்துக்கு வந்தவர் தான். அன்று முதல் இங்கு தான் வசித்து வருகிறார். இவருக்கு தற்போது 60 வயதாகிறது. அரசு கொடுத்து உதவிப் பணத்தை வைத்துக் கொண்டு சாப்பாட்டைக் கவனித்துக் கொண்டு  தூங்குவது, குளிப்பது எல்லாமே விமான நிலையத்தில்தானாம். வெய்யின் கதை குறித்து அறிந்த சீன செய்தி நிறுவனம் ஒன்று அவரை அணுகி பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளது.

அந்தப் பேட்டியில் தனது சோகக் கதையை விவரித்துள்ளார் 2008 ஆம் ஆண்டு முதல் இந்த விமான நிலையத்தில் தான் தங்கி வருவதாகவும் ,எல்லா சூழ்நிலையிலும், கொரோனாவே வந்து உலகை உலுக்கியபோதும், தளராமல் இங்கேயே வாழ்ந்து வருவாதகவும், எனக்கு 45 வயது ஆனபோது எனது வேலை போய் விட்டது. நான் பல இடங்களிலும் வேலை தேடினேன். எனது அதிக வயது காரணமாக வேலை கிடைக்கவில்லை. வீட்டில் எனக்கு சுதந்திரம் இல்லாததால் என்னால் அங்கு செல்ல முடியாது.

நான் வீட்டிலே தங்க வேண்டுமென்றால், நான் புகைபிடிப்பதையும் குடிப்பதையும் விட்டுவிட வேண்டும் என்று என் குடும்பத்தினர் என்னிடம் சொன்னார்கள். என்னால் அதைச் செய்ய முடியாவிட்டால், எனது மாதாந்திர அரசு உதவித்தொகையான 1,000 யுவான் அவர்களிடத்தில்  வழங்க வேண்டும் என கூறுகிறார்கள். பணத்தை அவர்களிடம் கொடுத்துவிட்டு மது, சிகரெட்டை நான் எப்படி வாங்குவேன்?” என்று லாஜிக்காக கேள்வி கேட்கிறார்.இதுகுறித்து  உங்களது கருத்தை கருத்துரை பதிவில் கூறுங்கள்.

Latest news