இன்றைய காலக்கட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது ஓர் வார்த்தை சொல்லமுடியாத அளவுக்கு உள்ளது. நாம் என்ன நினைக்கிறோமோ அதனை இந்த தொழில்நுட்பங்கள் செய்தே முடித்து விடுகின்றது.
அதாவது, இந்த அபரிமிதமாக வாழ்ந்து வரும் AI கொண்டு இறந்தவர்களுடன் நாம் பேசுவது போன்றும் அவர்களுடன் நாம் புகைப்படம் எடுப்பது போன்றும், குழந்தைகள், பூனைகள் என்ன அனைத்தயும் பேசுவது போல எல்லாவற்றையும் உருவாக்கப்படுகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பலவிதமான உலா வருகின்றன.
அந்த வகையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதாவது AI தொழில்நுட்பத்தால் அவரது தந்தையும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் சிறு வயது முதல் தற்போது வரை அவர் கடந்து பாதை குறித்து விளக்கும் விதமாக வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.