குமரி மாவட்டம் அருமனையை அடுத்த மஞ்சாலுமூடு பகுதியை சேர்ந்தவர் 78 வயதான மூதாட்டி லட்சுமி குட்டி. இவரிடம் அசோகன் என்பவர் 2009ஆம் ஆண்டு 10 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதாக தெரிகிறது. தற்போது வரையிலும் வட்டியோ, அசலோ கொடுக்காத காரணத்தினால், மூதாட்டி லட்சுமி குட்டி தனது மகன் அனில்குமார் துணையுடன் கட்டிலுடன் வந்து அசோகன் வீட்டின் முன் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுதொடர்பாக அருமனை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அசோகனை காவல் நிலையத்தில் வரவழைத்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து மூதாட்டி வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்