கழுத்தை நெறிக்கும் விதமாக தங்க நகை அடகு கடனுக்கு ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை வெளியிட்டிருக்கிறது.
வங்கிகள் மற்றும் வங்கிகள் இல்லாத நிறுவனங்களுக்கு ரிசர்வ் வாங்கி இதை அறிவித்திருக்கிறது …அந்த விதிகள் என்னவென்றால்,
தங்க நகையின் மதிப்பில் 75% மட்டும் தான் கடனாக பெற முடியும். நகைகளை அடகு வைக்கும் போது உரிய ஆவணங்கள் கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும்.
முக்கியமாக வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் நகைகளுக்கான தூய்மை சான்றிதழ் வழங்க வேண்டும்.
மேலும் தங்க ஆபரணங்கள் மற்றும் வங்கியில் வாங்கிய தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் கிடைக்கும் .
வெள்ளிப் பொருட்களுக்கும் கடன் பெறலாம், ஆனால் ஒரு கிலோவுக்கு குறைவான அளவுக்கு மட்டும் தான் கிடைக்கும்.
குறிப்பாக நகைகள் 22 காரட் தங்கத்தின் விலையை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே மதிப்பீடு செய்யப்படும்.
இதையெல்லாம் தாண்டி இதில் சில சாதகமான அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
நீங்கள் கடனை முழுமையாக திருப்பிச் செலுத்தியவுடன், அதற்குப் பிறகு ஏழு வேலை நாள்களுக்குள் வங்கி அல்லது நிதி நிறுவனம் உங்கள் நகையை திருப்பி கொடுக்கவேண்டும்.
இந்த காலக்கெடுவை மீறினால், வங்கிகள் ஒவ்வொரு தாமத நாளுக்கும் ₹5,000 அபராதம் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
மேலும், வாடிக்கையாளரின் எழுத்துப்பூர்வ அனுமதி இல்லாமல் இனிமேல் யாரும் நகைகளை ஏலத்திற்கு விட முடியாது.
இது நகைகளை மீட்டுப் பெற முடியாமல் போகும் அபாயத்தை முற்றிலுமாகக் கட்டுப்படுத்தும் ஒரு முக்கிய பாதுகாப்பு நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.