வயலில் தேடியதால் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன அதிர்ஷ்டசாலி……புதையல் மர்மம்

293
Advertisement

ஒரு இஞ்ச் அளவுள்ள 15 கிராமுக்கும் குறைவான எடைகொண்ட
தங்க நாணயப் புதையலைக் கண்டெடுத்ததன்மூலம் ஒரே நாளில்
கோடீஸ்வரர் ஆகியுள்ளார் பிரிட்டீஷ்காரர் ஒருவர்.

வெஸ்ட் டீன் என்னும் கிராமத்தில் மெட்டல் டிடெக்டர் உதவியுடன்
புதையலைத் தேடிவந்தவர்தான் இந்த அதிர்ஷ்டசாலி.

வயலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த நாணயம் 2 லட்சம் பவுண்ட்
மதிப்பு கொண்டது. இதன் மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 2 கோடி
ரூபாய்க்கும் அதிகமானது.

நிலப்பரப்பின் மேல்மட்டத்திலிருந்து 7 அங்குல ஆழத்தில் இந்த நாணயம்
புதையுண்டிருந்தது. எட்டு ஆண்டுகளாக இவர் புதையலைத் தேடிவந்துள்ளார்.
இந்த நாணயம் மலைப்பகுதியிலுள்ள 5 ஏக்கர் நிலப்பரப்பில் தேடியபோது கண்டறியப்பட்டது.

இந்த மதிப்புக்குக் காரணம் இந்த நாணயம் 1, 200 ஆண்டுகள்
பழமையானது என்பதுதான். West Saxons பகுதி அரசனுக்காக
9 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்த நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.