நடுக்கடலில் அமெரிக்கா செய்த ‘சம்பவம்’! மிரண்டு ஓடிய 27 கப்பல்கள்! US-இன் அடுத்த அவதாரம்?

நடுக்கடலில் பறந்து கொண்டிருக்கும் ஒரு ராணுவ ஹெலிகாப்டர், அதிலிருந்து ஒரு பிரம்மாண்டமான மெஷின் கன் ஒரு சரக்குக் கப்பலை நோக்கி மிகத் துல்லியமாகக் குறிவைக்கப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் ரேடியோவில் ஒரு கம்பீரமான குரல் ஒலிக்கிறது… “நீங்கள் ஒரு ராணுவ முற்றுகை பகுதிக்குள் நுழைகிறீர்கள். இது அமெரிக்கப் போர்க்கப்பல் 115-ன் எச்சரிக்கை!”என்கிறார்.

இது ஏதோ ஹாலிவுட் படத்தின் காட்சி அல்ல, ஈரான் உடனான போரின் ஒரு பகுதியாக ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க ராணுவம் நடத்தி வரும் நிஜமான முற்றுகை வேட்டை. அமெரிக்காவின் சென்ட்காம் (CENTCOM) வெளியிட்டுள்ள இந்த வைரல் வீடியோ இப்போது ஒட்டுமொத்த உலகையும் அதிர வைத்துள்ளது.

இந்த வீடியோவில் பேசும் அமெரிக்க வீரர், எந்த நாட்டுக் கொடி ஏந்திய கப்பலாக இருந்தாலும், அது ஈரானியத் துறைமுகங்களுக்குச் சென்றாலோ அல்லது அங்கிருந்து வெளியேற முயன்றாலோ, சர்வதேச சட்டப்படி அதைச் சோதனையிட தங்களுக்கு உரிமை உள்ளதாக எச்சரிக்கிறார். “ஒருவேளை நீங்கள் தப்பியோட முயன்றால், ராணுவ பலத்தைப் பயன்படுத்தி உங்களைப் பணிய வைப்போம்” என்று அந்த வீரர் விடுத்துள்ள மிரட்டல், அமெரிக்கா எவ்வளவு ஆக்ரோஷமாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இதுவரை சுமார் 27 வணிகக் கப்பல்களை இப்படி துப்பாக்கி முனையில் மிரட்டி அமெரிக்கா திருப்பி அனுப்பியுள்ளது. இது ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு ஒரு மிகப்பெரிய அடியாக விழுந்துள்ளது.

இந்த முற்றுகை ஒருபுறம் இருக்க, ஈரான் தனது தரப்பில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியுள்ளது. உலக நாடுகளின் எண்ணெய் தேவையில் ஒரு பெரும் பகுதி இந்தப் பாதை வழியாகத்தான் வர வேண்டும் என்பதால், ஈரான் இதைப் பேச்சுவார்த்தைக்கான ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துகிறது. ஆனால், அமெரிக்காவின் இந்த முற்றுகை காரணமாக ஈரானுக்கு நாளொன்றுக்கு பல கோடி டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இந்தப் பொருளாதார நெருக்கடியைத் தாண்டி ஈரானால் எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்க முடியும் என்பது சந்தேகமாகவே உள்ளது. இதற்கிடையில், ஈரானின் மறைந்த தலைவர் கமேனியின் மகன் மோஜ்தபா, இப்போது ரகசியமாகத் தலைமைப் பொறுப்பை ஏற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் தகவல்கள் கசிகின்றன.

இன்னும் சில நேரங்களில் போர்நிறுத்தக் காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில், மீண்டும் முழு அளவிலான போர் வெடிக்குமா என்ற அச்சம் நிலவுகிறது. அமெரிக்காவோ ஈரானின் எரிசக்தி மற்றும் ராணுவ விநியோகச் சங்கிலியை நடுக்கடலிலேயே அறுத்தெறியத் தயாராக இருப்பதை இந்த மெஷின் கன் எச்சரிக்கை உறுதிப்படுத்துகிறது. ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தைகள் பற்றிப் பேசினாலும், மறுபுறம் நடுக்கடலில் துப்பாக்கி முனையில் கப்பல்களை மிரட்டுவது அமெரிக்காவின் “No More Mr. Nice Guy” பாலிசியைத் தெளிவாகக் காட்டுகிறது.

Related News

Latest News