Sunday, January 25, 2026

களமிறங்கும் ஹைப்பர் சோனிக்! பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுக்கும் இறுதி எச்சரிக்கை!

இந்த ஆண்டு நடைபெறவுள்ள குடியரசு தின விழா வழக்கமான நிகழ்ச்சியாக இருக்காது. பாகிஸ்தானுக்கு நேரடியாக ஒரு கடும் எச்சரிக்கையை வெளிப்படுத்தும் வகையில், இந்திய ராணுவம் இதுவரை காணாத அளவிலான பிரம்மாண்டமான பலத்தைக் டெல்லியில் காட்சிப்படுத்தத் தயாராகியுள்ளது. குறிப்பாக, பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்களை அழித்த ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நினைவூட்டும் வகையில், இந்திய விமானப்படை முதல் முறையாக ஒரு தனித்துவமான அணிவகுப்பை நடத்தவுள்ளது.

ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்ற ரஃபேல், சுகோய்-30 மற்றும் மிக்-29 போர் விமானங்கள், வானில் “சிந்தூர் ஃபார்மேஷன்” என்ற சிறப்பு வடிவத்தில் பறந்து அணிவகுப்பை மேற்கொள்ளும். பாகிஸ்தான் தனது தோல்வியை மறைக்கும் முயற்சியாக ராணுவத் தளபதிகளுக்கு பதவி உயர்வு வழங்கி நாடகமாடினாலும், இந்தியா தனது உண்மையான ராணுவ பலத்தை உலகுக்கு வெளிப்படையாக காட்டும் என்ற செய்தியே இதன் மூலம் சொல்லப்படுகிறது.

இதனுடன், பாகிஸ்தான் ராணுவத் தளங்களை தாக்க பயன்படுத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைகள் மற்றும் 350 கிலோமீட்டர் தொலைவிலிருந்தே எதிரி விமானங்களை அழிக்கும் திறன் கொண்ட S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பும் அணிவகுப்பில் இடம் பெறுகிறது. எதிரியை முதலில் கண்டறிதல், முதலில் முடிவு எடுதல், முதலில் தாக்குதல் ஆகியவை தான் இந்தியாவின் பாதுகாப்பு கொள்கை என்ற கருத்தை இது வலியுறுத்துகிறது.

மேலும், முழுமையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அர்ஜுன் முதன்மை போர் டாங்க், முதல் முறையாக குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க உள்ளது. அதேபோல், டிஆர்டிஓ உருவாக்கிய, ஒலியின் வேகத்தை விட பல மடங்கு வேகத்தில் பாயக்கூடிய ஹைப்பர் சோனிக் ஏவுகணையும் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்பட உள்ளது.

மொத்தத்தில், இந்தியாவை சீண்டினால் அதன் விளைவுகளை தாங்க முடியாது என்ற கடுமையான எச்சரிக்கையை பாகிஸ்தானுக்கு நேரடியாக உணர்த்தும் வகையிலேயே இந்த ஆண்டு குடியரசு தின விழா அமையவுள்ளது.

Related News

Latest News