மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே, நடத்தையில் சந்தேகப்பட்ட காதல் மனைவியை கணவர் டீசல் ஊற்றி கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த கண்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதித்யன், 28 வயதான இவர், அதே பகுதியை சேர்ந்த பிரேமா என்பவரை 5 வருடங்களுக்கு காதலித்து முன் திருமணம் செய்திருக்கிறார். தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், ஆதித்யனின் நடத்தை மீது மனைவி பிரேமா சந்தேகம் கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதேபோல், சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில், மனைவி மீது ஆதித்யன் டீசல் ஊற்றி கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 70 சதவிகித தீக்காயங்களுடன் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரது கணவர் ஆதித்யனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
