2016 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த UPI, நாட்டு முழுவதும் வங்கிக் கணக்குகளை இணைத்து விரைவான, பாதுகாப்பான மற்றும் எளிய முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் கீழ் அரசு முறையான ஊக்குவிப்புகளை வழங்கி, கிராமப்புறங்களிலும் நகரங்களிலும் உள்ள மக்கள் மொபைல் பயன்பாட்டை விரிவடையச் செய்துள்ளது.
இந்தியாவின் UPI வெற்றிக்கு பிறகு சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ், மொரிஷியஸ் போன்ற நாடுகளிலும் இந்திய UPI-யை தங்களது நாட்டில் பயன்படுத்த திட்டமிட்டு வருகின்றன.
2025-இல் வெளியான தகவலின்படி, VISA அந்நாளில் 639 மில்லியன் பரிவர்த்தனைகளை (5517 கோடி ரூபாய் மதிப்பில்) செயல்படுத்தியிருக்கிறது. ஆனால், அதே நாளில் இந்தியாவின் UPI முறையில் 640 மில்லியன் பரிவர்த்தனைகள் (5518 கோடி ரூபாய் மதிப்பில்) நிகழ்ந்துள்ளது.
இந்தியாவின் UPI, வெறும் டிஜிட்டல் பரிவர்த்தனை முறையாக அல்ல; அது நாடு வளர்ச்சியின் ஒரு சின்னமாகவும் மாற்றமடைந்துள்ளது.