அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு தலா 1.60 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய ட்ரம்ப், ஆயுதப் படைகளின் சேவை மற்றும் தியாகத்தைப் போற்றும் வகையில், அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு ‘போர்வீரர் ஈவுத்தொகை’ என்ற சிறப்புப் பணப் பரிசை அறிவிக்கிறேன்.
1776-ம் ஆண்டில் அமெரிக்கா நிறுவப்பட்டதைக் கவுரவிக்கும் விதமாக இந்த ஈவுத்தொகை வழங்கப்படும். 14.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக தலா 1,776 அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 1.60 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
