அமெரிக்க அதிபராக டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதே முதல் நோக்கம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
புடினைப் பற்றி கவலைப்படுவதைக் குறைத்து, சட்டவிரோத குடியேற்றங்கள், வன்கொடுமை சம்பவங்கள், மற்றும் கொலைகாரர்கள் நம் நாட்டிற்குள் நுழைவதைப் பற்றி அதிக நேரம் கவலைப்பட வேண்டும்.
நான் பதவியேற்ற முதல் ஒரு மாதத்திற்குள் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கையை வரலாற்றுச் சிறப்புமிக்க அளவிற்குக் குறைக்க முடிந்தது என அவர் கூறியுள்ளார்.