Monday, February 16, 2026

ஜனநாயகன் சென்சார் விவகாரம் : உச்சநீதிமன்றம் சென்ற படக்குழு

நடிகர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம், பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சர்ச்சைக்குரிய காட்சிகள் காரணமாக இதுவரை தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் படக்குழு மனு தாக்கல் செய்தது. இதையடுத்து, ஜனநாயகன் படத்திற்கு U/A சென்சார் சான்றிதழ் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் சிறிது நேரத்தில் ஜனநாயகன் படத்திற்கு U/A சென்சார் சான்றிதழ் வழங்க தனி நீதிபதி உத்தரவை நீதிமன்றம் தடை செய்தது. மேலும் இது தொடர்பான வழக்கை ஜனவரி 21ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

இந்நிலையில், ஜனநாயகன் படத்திற்கு சென்சார் வழங்க வேண்டும் என்ற தனிநீதிபதி உத்தரவிற்கு உயர்நீதிமன்ற அமர்வு இடைக்கால தடையை எதிர்த்து KVN தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

Related News

Latest News