ஐதராபாத்திற்கு வருகை தரும் கால்பந்து வீரர் மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுக்க 10 லட்சம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகிறார். 13ஆம் தேதி ஐதராபாத் வரும் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியுடன் ரசிகர்கள் சிறப்பு புகைப்படங்களை எடுத்துக்கொள்ளலாம்.
ஒரு புகைப்படத்திற்கு ரூ. 10 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என ஏற்பாட்டுக் குழுவின் ஆலோசகர் பார்வதி ரெட்டி தெரிவித்துள்ளார்.
