Friday, August 22, 2025
HTML tutorial

மகனுக்கு ABCDEF GHIJK Zuzu என்று பெயர் வைத்த தந்தை

தன் மகனுக்கு ABCDEF GHIJK Zuzu என்று ஒருவர் பெயர் சூட்டிய விஷயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தோனேஷியாவின் தெற்கு மாகாணமான சுமத்ராவைச் சேர்ந்த ஃஜுஹ்ரோ- ஃஜுல்ஃபாமி தம்பதி தங்களின் மூத்த மகனுக்கு இப்படிப் பெயர் சூட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்தபோது இந்த விஷயம் தெரிய வந்துள்ளது.

தடுப்பூசி முகாமுக்கு வந்த அந்த 12 வயது சிறுவன் தன் பெயரை எழுதியபோது, அங்கிருந்த மருத்துவ அதிகாரிகள் சந்தேகமாகவும் ஆச்சரியத்தோடும் சிறுவனைப் பார்த்தனர். பின்னர், சிறுவனின் தந்தையை அழைத்துக்கேட்டுள்ளனர். சிறுவனின் தந்தையும் உண்மையைச் சொல்ல, உடனே வைரலாகத் தொடங்கியுள்ளது இந்தப் பெயர்.

எதற்காக இந்தப் பெயரைச் சூட்டினீர்கள் என்று கேட்டதற்கு,” என் பையன் குறுக்கெழுத்துப் புதிர்ப் போட்டிகளில் ஆர்வமாக இருக்கிறான். அதற்காக இப்படி வித்தியாசமாக பெயர் சூட்டினோம்” என்கிறார் சிறுவனின் தந்தை.

ஆங்கில எழுத்துகளில் முதல் 11 எழுத்துகளோடு தன் பெயரின் முதல் எழுத்தையும் மனைவி பெயரின் முதல் எழுத்தையும் சேர்ந்து இப்படி நீண்டதொரு பெயரை மகனுக்கு சூட்டி உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் ஃஜுஹ்ரா.

முதல் மகனுக்கு NOPQ RSTUV என்றும், இரண்டாவது மகனுக்கு XYZ என்றும் பெயரிட விரும்பியுள்ளார். அதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதனால், அம்மர், அட்டூர் என்று பெயரிட முடிவுசெய்துள்ளார். அப்போது மகனின் புதிர்ப்போட்டி ஆர்வத்தைப் பார்த்த ஃஜுஹ்ரா, அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு மூத்த மகனுக்கு இப்படிப் புதுவிதமான பெயரை வைத்துள்ளார்.

என்றாலும், இப்படிப் பெயரிடுவது புதிதல்ல, பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு தம்பதி தங்கள் குழந்தைக்கு Ghlynnyl Hylhyr Yzzghyl என்று பெயரிட்டுள்ளனர். செல்லமாக consonant என்றுஅழைத்துக் குழந்தையைக் கொஞ்சுகின்றனராம்.

கலிபோர்னியாவில் வசித்துவரும் ஒரு தம்பதியோ ரோமன் எழுத்துகளையே தங்கள் குழந்தைக்கு பெயராக்கியுள்ளனர்….

எப்படி உச்சரிப்பார்கள் இந்தப் பெயர்களை… ஒரே கொழப்பமா இருக்குல்ல……

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News