ஈக்வடாரில் இருக்கும் பார்சிலோனா டி குவாயாகில் கிளப்பின் டிஃபென்டர் மரியோ ஆல்பர்டோ பினிடா மார்டினெஸ் (33 வயது) கடை வீதியில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் சேர்ந்து சில இயக்கங்கள் இந்தக் கொலைச் சம்பவங்களை ஏற்படுத்தி வருவதாக அந்நாட்டின் அதிபர் டேனியல் நொபோவா கூறியுள்ளார்.
இவரது கொலைக்கு கிளப் அணியினரும் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்து வருத்தத்தை பதிவு செய்துள்ளார்கள்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
