பெங்களூர், நாகவாரா பகுதியைச் சேர்ந்தவர் டேனியல் மகன் ராகுல். அதே பகுதியைச் சேர்ந்த ராஜாராவ் மகள் கீர்த்தணா. இருவரும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். காதலன் ராகுலின் வீட்டில் சம்மதம் தெரிவித்த நிலையில், கீர்த்தணா வீட்டில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், பெங்களூரில் இருந்து நேற்று உலகப் புகழ்பெற்ற திருமணம் செய்து வைக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து காதலன் குடும்பத்தினர் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் காதல் ஜோடியுடன் தங்கியிருந்தனர்.
தகவல் அறிந்த பெங்களூரில் இருந்த பெண் கீர்த்தணா குடும்பத்தார், சுமார் 15 பேர் வேளாங்கண்ணிக்கு வந்து, அவர்கள் தங்கி இருந்த விடுதிக்குள் புகுந்து, காதலன் மற்றும் அவரது குடும்பத்தாரை கத்தியால் வெட்டி, பெண்ணை தூக்கிச் சென்றுள்ளனர்.
இதில் தடுக்க முயன்ற காதலன் ராகுல், அவரது தந்தை டேனியல், மாமா பிரகாஷ், அம்மா கலையரசி ஆகியோர் வெட்டுக் காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
