https://www.instagram.com/reel/CUqUT7eBPS-/?utm_source=ig_web_copy_link
யானையின் உதவியுடன் ஒருவர் பேஸ்கட் பால் விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
பொழுதுபோக்க உதவும் யானையின் வீடியோக்களை இணையத்தில் நாம் நிறைய பார்த்திருக்கிறோம். மிக அரிதாக மனிதன் விளையாட உதவும் யானையின் செயலை வீடியோ வாயிலாகக் காண்பது வலைத்தளவாசிகளை மகிழ்வித்துள்ளது.
மற்ற விளையாட்டுகளை விளையாடுவதற்கு திறமை தேவை. ஆனால், கூடைப்பந்து விளையாடுவதற்கு முதல் தகுதியே வீரர்களின் உயரம்தான். உயரமான வீரர்களாலேயே உயரே குதித்து பந்தை கூடையில் போடமுடியும்.
அந்த வகையில் கூடையில் பந்தைப் போடுவதற்கானப் பயிற்சியை இந்த யானை வாயிலாக வீரர் ஒருவர் எப்படிப் பெறுகிறார் என்பதை நீங்களே பார்த்து ரசித்து மகிழுங்கள்.
யானை மரத்தடிகளை இழுத்து வருவதைப் பார்த்து பழகியவர்களுக்கு இந்த வீடியோ புதுமையாக இருக்கும்.