Wednesday, February 4, 2026

தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் பல்வேறு அரசியல் வியூகங்களை வகுத்து வருகிறார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தவெக சார்பில் அளிக்கப்பட்ட பொதுவான 10 சின்னங்கள் அடங்கிய பட்டியலில் ஆட்டோ, கிரிக்கெட் பேட், விசில் போன்ற சின்னங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் ஏதேனும் ஒரு சின்னம் கட்சிக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது விசில் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Related News

Latest News