Thursday, July 31, 2025

கைவண்டியைத் தள்ளி எஜமானுக்கு உதவிசெய்யும் நாய்

செல்லப் பிராணிகளில் முதலிடம் வகிப்பது நாய்கள் தான்.
நாய் என்று சொல்வதைவிட குடும்பத்தில் ஓர் உறுப்பினர்
என்று சொல்லலாம்.

மனிதனுக்கு நன்றியோடு உதவுவதில் நாய்களே ஈடு
இணையற்று விளங்குகின்றன.

சுமை வண்டியை இழுத்துச்செல்லும் எஜமானருக்கு உதவும்
நாயின் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

அந்த வீடியோக் காட்சியில் கை வண்டியில் சுமைகளைக்
கட்டிக்கொண்டு சாலையில் இழுத்துச் செல்கிறார் தொழிலாளி
ஒருவர். அவரது கஷ்டத்தை உணர்ந்த நாய் பின்னாலிருந்து
வண்டியைத் தள்ளிச்செல்வதுடன், வண்டியிலுள்ள சுமைகள்
கீழே விழுந்துவிடாமல் முகத்தால் தடுத்துக்கொண்டே செல்கிறது.

இதைப் பார்ப்போரின் கண்கள் கண்ணீரால் நனைகின்றன.
நாய்களுக்கு இருக்கும் உணர்வுகூட பல மனிதர்களுக்கு
இல்லையே என்று உருகுகின்றனர்.

விசுவாசத்தின் மறுபெயர் நாய் என்று சொன்னால் மிகையல்ல.
உண்ட சோற்றுக்குத் ரெண்டகம் (துரோகம்) செய்யாத பூமியிலுள்ள
ஓர் உயிரினம் நாய்கள் மட்டுமே.

‘நன்றிகெட்ட மகனைவிட நாய்கள் மேலடா’ என்னும் படிக்காத
மேதைத் திரைப்படப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News