Friday, December 26, 2025

தேர்தலில் தனித்துப்போட்டியிட தே.மு.தி.க. தயங்காது – பிரேமலதா விஜயகாந்த்

சட்டமன்ற தேர்தலில் தனித்துப்போட்டியிட தே.மு.தி.க. தயங்காது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தே.மு.தி.க. அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மாவட்ட, செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனித்துப்போட்டியா? என்பது பற்றி தற்போது பதில் கூற முடியாது என்றும், அந்த கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லும் எனவும் கூறினார்.

அதே நேரத்தில் தேர்தலில் தனித்துப்போட்டியிட தே.மு.தி.க. தயங்காது என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார். கடலூரில் அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி தே.மு.தி.க. மாநாடு நடைபெறும் என்று கூறிய பிரேமலதா விஜயகாந்த், தே.மு.தி.க.வுக்கு 2026ம் ஆண்டு மாநிலங்களவை சீட் கொடுக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Related News

Latest News