பொங்கல் விழா கொண்டாட்டமானது திருப்பூரில் திமுக சார்பில் பல்வேறு இடங்களில் நேற்றும் இன்றும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருப்பூர் ராயபுரம் பகுதியில் திராவிட பொங்கல் விளையாட்டு போட்டிகளானது நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் . அங்கு மேல தாளங்கள் இசைக்கு ஏற்றவாறு பொதுமக்களுடன் சேர்ந்து நடனமாடி மகிழ்ந்தார்.
