Saturday, December 20, 2025

“திமுக ஒரு தீய சக்தி, தவெக ஒரு தூய சக்தி” : ஈரோட்டில் விஜய் பேச்சு

ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் இன்று (வியாழக்கிழமை) த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்துக்கு விஜய் வருகை தந்துள்ளார். அவருக்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த கூட்டத்தில் விஜய் பேசியதாவது : மஞ்சள் பொதுவாக நல்ல காரியம் தூங்குவதற்கு முன் மஞ்சளை வைத்து ஆரம்பிப்பார்கள். நம் கொடியில் கூட அந்த மஞ்சள் உள்ளது. இங்கு வந்து மஞ்சள் பொட்டி பேசாமல் வேறு எங்கே சென்று பேசுவது.

ஒரு காரியத்திற்கு பெற்ற தாய் கொடுக்கின்ற தைரியத்தை தவிர வேறு எந்த தைரியம் பெரிதல்ல. அதுபோல்தான் நீங்கள் தங்கை அனைவரும். நீங்கள் தான், நீங்கள் கொடுக்கும் தைரியம்தான்.

அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை விரிவுபடுத்தினால் மூன்று மாவட்ட மக்கள் மற்றும் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பயன்பெறுவார்கள். ஏன் அதை செய்வதில்லை?

அண்ணாவும் எம்ஜிஆர்வும் தமிழ்நாட்டின் சொத்து. இதை யாரும் தடுக்க முடியாது. பெரியார் பெயரை சொல்லிக்கொண்டு ஆட்சியில் இருக்கிறவர்கள் என்னதான் செய்கிறார்கள்? அவர் பெயரை சொல்லி தயவு செய்து கொள்ள அடிக்காதீர்கள்.

ஆட்சிக்கு வருவதற்கு முன் அந்த திட்டம், இந்த திட்டம் என்று சொன்னார்கள், எந்த திட்டமும் இதுவரை செய்யவில்லை.

விஜய் எத்தனை நிமிஷம் பேசினால் உங்களுக்கு என்ன சார்? ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று மக்கள் படும் பிரச்சனையை பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன். கேவலமாக பேசுவது தான் அரசியல் என்றால் அந்த அரசியல் எனக்கு வராது.

திமுக ஒரு தீய சக்தி, தவெக ஒரு தூய சக்தி, தீய சதி திமுக விற்கும் தூய சக்தி டி வி கே விற்க்கும் மட்டுமே போட்டி என அவர் பேசியுள்ளார்.

தமிழகத்தில் ஆட்சி செய்கின்ற நீங்களும் சரி, மத்தியில் ஆட்சி செய்கின்றவர்களும் சரி, என்னுடைய கேரக்டரையே புரிஞ்சிக்கவில்லை.

2026 தேர்தலில் மக்கள் சரியான பாடம் உங்களுக்கு புகட்டுவார்கள் என அவர் பேசியுள்ளார்.

Related News

Latest News