திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுவின் முதல் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறுகிறது.
2026 சட்டமன்ற தேர்தலுக்காக, திமுக எம்.பி கனிமொழி தலைமையில், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை திமுக அறிவித்துள்ளது. அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், கோவி செழியன், டி.ஆர்.பி.ராஜா மற்றும் டிகேஎஸ் இளங்கோவன், காண்ஸ்டண்டைன் ரவீந்திரன் உள்ளிட்ட திமுக மூத்த நிர்வாகிகள் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
திமுகவின் இந்த தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுவின் முதல் கூட்டம் எம்.பி.கனிமொழி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
