துபாயில் இருந்து மதுரைக்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நேரடி விமான சேவையை இயக்கி வருகிறது. இதுவரை இந்த விமானம் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு, மதுரை விமான நிலையத்தை காலை 11.40 மணிக்கு சென்றடைந்து வந்தது. ஆனால், இந்த விமான சேவையின் நேர அட்டவணையில் இன்று முதல் (திங்கட்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், துபாயில் இருந்து அதிகாலை 1.55 மணிக்கு புறப்படும் விமானம், மதுரையை காலை 7.40 மணிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மறுமார்க்கமாக மதுரையில் இருந்து காலை 8.50 மணிக்கு புறப்படும் விமானம், காலை 11.25 மணிக்கு துபாய் வந்தடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
