Monday, December 8, 2025

3 வது கணவருக்காக 2 வது கணவரின் குழந்தையை தூக்கி வீசிய கொடூர பெண்

தென்காசியைச் சேர்ந்த கண்ணன் என்ற நபர், மதுரை மாவட்டம் செக்காணூரணியை அடுத்துள்ள கோழிப்பண்ணையில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இவர் கேரளா புனலூரைச் சேர்ந்த கலாசூர்யா என்பவரை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். மேலும் அவரது 2 வயது குழந்தையுடன் அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

அந்த 2 வயது குழந்தை தொந்தரவாக இருப்பதாக அடிக்கடி கண்ணன் கலாசூர்யாவிடம் கூறி வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 20 நாட்களக்கு முன் கலாசூர்யா கடைக்கு சென்றிருந்தார். அப்போது கண்ணன், அந்த 2 வயது குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

அதுபற்றி அறிந்த கலாசூர்யா அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இருவரும் சேர்ந்து குழந்தையின் உடலை ஒரு மூட்டையில் கட்டி அருகில் உள்ள காட்டுப்பகுதி புதரில் வீசிவிட்டு சென்றனர்.

இதனிடையே இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் தாய் வீட்டிற்கு சென்ற கலாசூர்யாவிடம் குழந்தை குறித்து உறவினர்கள் கேட்ட போது முன்னுக்கு பின் முரணான பதில் அளித்ததால் சந்தேகமடைந்த கலாசூர்யாவின் தாய் சந்தியா கேரள மாநிலம் புனலூர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.,

இதன் அடிப்படையில் கேரளா போலீசார் மற்றும் செக்காணூரணி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பெண் குழந்தையை கொன்று வீசியதை கண்ணன் மற்றும் கலா ஒப்புக்கொண்டனர்.

அதன்படி காட்டு பகுதியில் எலும்பு துண்டுகளாக கிடந்த குழந்தையின் தடையங்களை சேகரித்து கண்ணன் – கலாசூர்யா என்று இருவரையும் கைது செய்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.,

கலா சூர்யாவிற்கு கண்ணன் மூன்றாவது கணவர் என்பதும், இரண்டாவது கணவர் அச்சு என்பவருக்கு பிறந்த குழந்தை சிவானி என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.,

பெண் குழந்தை கழுத்தை நெறித்து கொலை செய்து காட்டுப்பகுதியில் வீசப்பட்டதும், 20 நாட்களுக்கு பின் எலும்பு துண்டுகளாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News