மயிலாடுதுறையில் 14 வயது மாணவி ஒருவர் அங்குள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த மாணவிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே மாணவியை அவரது தாயார் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவி 6 வாரம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் விசாரணை நடத்தினர். விசாரணையில், மாணவியின் கர்ப்பத்திற்கு அவரது தந்தைதான் காரணம் என்பது தெரிய வந்தது.
சிறுமியின் தாயார் வேலைக்கு சென்ற பிறகு தனது மகளிடம் தகாத உறவில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து சிறுமியின் அந்த கொடூர தந்தையை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
