டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக பதவியேற்ற பிறகு, குடியேற்ற விதிகள் மற்றும் விசா நடைமுறைகளை கடுமையாக்கினார். இதையடுத்து ஹெச்1பி விசா தொடர்பாக பல கட்டுப்பாடுகளை விதித்தார். அதன் ஒரு பகுதியாக, அமெரிக்க நிறுவனங்களில் பணிபுரியும் திறமைமிக்க வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஹெச்1பி விசாவின் கட்டணத்தை ரூ.89 லட்சமாக உயர்த்தினார்.
இந்த முடிவை எதிர்த்து, அமெரிக்க வர்த்தக சபை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஹெச்1பி விசா கட்டணத்தை உயர்த்திய டிரம்பின் உத்தரவுக்கு அனுமதி வழங்கினார். ஹெச்1பி விசா தொடர்பாக அமெரிக்க அரசு, சட்ட விதிகளுக்கு உட்பட்டே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் முடிவெடுக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறி, அமெரிக்க வர்த்தக சபை முன்வைத்த வாதங்களை நீதிபதி நிராகரித்தார்.
இந்த நிலையில், நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு இந்தியர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்துள்ளது.
