Sunday, January 25, 2026

‘திமுக ஆட்சிக்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது’ – பிரதமர் மோடி ஆவேசம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களான எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது :-

திமுக ஆட்சியை அவர் சிஎம்சி ஆட்சி என விமர்சித்தார். அதாவது கரப்ஷன், மாபியா, கிரிமினல்கள் நிறைந்துள்ள ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது.

ஆட்சி மாற்றத்துக்குத் தமிழகம் தயாராகிவிட்டது. மக்கள் வெள்ளம்போல இங்குக் கூடியுள்ளனர். என்டிஏ கூட்டணி ஆட்சியை மக்கள் விரும்புகின்றனர்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். தமிழ்நாட்டை ஊழலற்ற, பாதுகாப்பான மாநிலமாக மாற்ற வேண்டும். ஆட்சி மாற்றத்திற்குத் தமிழகம் தயாராகிவிட்டது. திமுக ஆட்சி முடிவுக்கான கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டது.

திமுக அரசு ஒரே ஒரு குடும்பத்திற்காக மட்டுமே இயங்கி வருகிறது. இங்கு ஜனநாயகம் இல்லை,. தமிழ்நாட்டு மக்களுக்கு திமுக அரசு துரோகம் இழைத்துவிட்டது.

பாஜகவின் கடந்த 11 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு மும்மடங்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு ரூ.3 லட்சம் கோடி கொடுத்துள்ளது மத்திய அரசு.வளர்ச்சி திட்டங்களுக்கு 11 லட்சம் கோடி வழங்கி உள்ளது.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Related News

Latest News