Wednesday, December 24, 2025

ஒப்பந்த செவிலியர்களின் போராட்டம் வாபஸ்

பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் செவிலியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். 7 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த நிலையில் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் வரும் 26ம் தேதி பணி நியமன ஆணை வழங்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News