எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய் நடிக்கும் கடைசி படம் இதுதான் என்று கூறப்படுகிறது. இதனால் படத்துக்கு சினிமாவை தாண்டி அரசியல் களத்திலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
“ஜனநாயகன்” படத்திற்கு, இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை குழு UA சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
3 மணிநேரம் 3 நிமிடங்கள் ஓடக்கூடிய ஜனநாயகன் திரைப்படத்தில் 10க்கும் மேற்பட்ட சண்டை காட்சிகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
