விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் உலகமெங்கும் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகவிருந்தது. இந்தப் படத்தின் வெளியீடு தற்போது சிக்கலகுக்கு உள்ளாகி இருக்கிறது. KVN புரொடக்ஷன்ஸ் LLP சுமார் ₹500 கோடி முதலீடு செய்து, 5,000 திரையரங்குகளில் இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தது.
படத்திற்கான அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், கடந்த மாதம் படத்தை தணிக்கைக்காக படக்குழு அனுப்பியது. தணிக்கைச் சான்றிதழ் தாமதமானதால், தயாரிப்பு நிறுவனம் அவசர வழக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. நேற்று தாக்கல் செய்த வழக்கில் நீதிமன்றம் இன்று தீவிர விசாரணை நடத்தி வந்தது.
அப்போது நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இந்நிலையில் இது தொடர்பான தீர்ப்பு நாளை மறுநாள் காலை (ஜனவரி 9) வெளியாகும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் படம் வெளியாகவுள்ள நிலையில் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாததால் ‘ஜனநாயகன்’ வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
