சுதா கொங்கரா – சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான இந்த திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
தணிக்கை குழுவின் சில ஆட்சேபனைகளுக்குப் பிறகு தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டு, யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், படம் ஜனவரி 10 அன்று திரைக்கு வந்தது. ஹிந்தி மொழித் திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்ற மாணவர்களின் எழுச்சியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம், வெளியானதிலிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
வசூல் ரீதியாக, பராசக்தி திரைப்படம் முதல் நாளிலேயே ரூ.27 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், படம் வெளியான இரண்டு நாட்களில் உலகளவில் ரூ.51 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
