Thursday, December 4, 2025

மறைந்த ஏ.வி.எம் சரவணன் உடல் தகனம் செய்யப்பட்டது

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மறைவுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வந்தனர்.

திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டு வந்த ஏவிஎம் சரவணன், ‘நானும் ஒரு பெண்’, ‘சம்சாரம் அது மின்சாரம்’, ‘சிவாஜி’, ‘வேட்டைக்காரன்’, ‘மின்சார கனவு’, ‘அயன்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார்.

சமீப காலமாக வயது மூப்பினால் ஏற்படும் உடல்நல பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஏவிஎம் சரவணன் இன்று காலை 5.30 மணியளவில் காலமானார். வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோஸில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்நிலையில் வடபழனியில் உள்ள மின்மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News