Sunday, December 28, 2025

ஆரம்பமானது கேன்ஸ் திரைப்பட விழா..

கேன்ஸ் திரைப்பட விழா 2023 உலகிலேயே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்பட விழாக்களில் ஒன்றாகும்

இவ்விழாவில் உலகம் முழுவதும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. பிரான்சில் மே 16 முதல் மே 27 வரை இவ்விழா நடைபெறவுள்ளது.76வது கேன்ஸ் திரைப்பட விழாவின் நடுவர் மன்றத் தலைவராக ரூபன் ஆஸ்ட்லண்ட் அறிவிக்கப்பட்டுள்ளார். தொழில் வல்லுநர்களுக்கான விழாவின் டிக்கெட் விலை ₹5 லட்சம் முதல் ₹25 லட்சம் வரை.

கடந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய அரசுக்கு மிகப்பெரிய பங்கு அளிக்கப்பட்டது.

75ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு 75வது ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் ஏகப்பட்ட இந்திய பிரபலங்கள் பங்கேற்றனர். கமல்ஹாசன், பா. ரஞ்சித், தீபிகா படுகோன், தமன்னா, பூஜா ஹெக்டே, மாதவன், அதிதி ராவ் உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விருது விழா மே 16ம் தேதியான இன்று தொடங்கி வரும் மே 27ம் தேதி வரை நடைபெறுகிறது.

ஆஸ்கர் விருது விழாவுக்கு பிறகு சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு விருது விழா என்றால் அது கேன்ஸ் திரைப்பட விழா தான். பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விருது விழா நிகழ்ச்சியில் வழங்கப்படும் பனை ஓலை விருது (பாம் டி ஓர் – palme d’or) விருது தான் ஹைலைட் என்கின்றனர்.இந்த ஆண்டும் இந்தியா சார்பாக ஏகப்பட்ட பிரபலங்கள் இந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News