கர்நாடகா மாநிலம் பெங்களூருவின் பிரதான சாலையில், பூக்களால் நிரம்பி சென்ற ஆட்டோவை கண்டு, வாகனஓட்டிகள் வியப்படைந்தனர்.
நிகழ்ச்சி ஒன்றிற்காக ஆட்டோ முழுவதும், ஊதா நிற பூக்கள் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அதனை கண்டு சாலையில் சென்றவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகனங்களின் இரைச்சல்களுக்கு மத்தியில், வண்ணமிகு பூக்களின் ஆட்டோ கண்களுக்கு விருந்தளித்ததாக குறிப்பிட்டு, இந்த வீடியோவை இணையவாசி ஒருவர் பகிர்ந்துள்ளார்.
