Sunday, December 22, 2024

கிராம நிர்வாக அலுவலரை, அலுவலகத்தில் வைத்து பூட்டிய உதவியாளர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கிராம நிர்வாக அலுவலரை, அலுவலகத்தில் வைத்து உதவியாளர் பூட்டிவிட்டு சென்றதாக புகார் எழுந்துள்ளது.

சின்னசேலம் அருகே உள்ள வடக்கனந்தல் மேற்கு கிராமத்தில் தமிழரசி என்பவர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இங்கு உதவியாளராக பணிபுரியும் சங்கீதா என்பவர் தமிழரசியை அலுவலகத்தின் உள்ளே வைத்து பூட்டிவிட்டு, பதிவேடுகளை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

தற்போது இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ள நிலையில், கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest news