Wednesday, December 24, 2025

கோவையில் வழிப்பறியில் ஈடுபட்ட நபர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்திற்காக கோவை பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (35) என்பவர் மீது பெரியநாயக்கன் பாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் அந்த நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அந்த நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

அந்த உத்தரவின்படி வழிப்பறி வழக்கின் குற்றவாளியான பிரகாஷ் (35) என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்து உள்ளார்.

Related News

Latest News