Tuesday, December 23, 2025

‘அதிமுக – பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்’ – எடப்பாடி பழனிசாமி பேட்டி

தமிழக சட்டசபை நெருங்கும் நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி தேர்தல் பணிகளை விரிவுபடுத்தி உள்ளன. இந்நிலையில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் அர்ஜூன்ராம் மேவல் இருவரும் இன்று சென்னை வந்தனர்.

தொடர்ந்து அவர்கள் அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி ஆகியோரை சந்தித்தனர்.

பியூஷ்கோயலுடனான சந்திப்புக்கு பிறகு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

”நீண்ட இடைவெளிக்கு பிறகு மத்திய மந்திரி பியூஷ்கோயலை சந்தித்து பேசினோம். இந்த சந்திப்பின்போது, தமிழக அரசியல் நிலவரம் குறித்து அவர் கேட்டறிந்தார். 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக – பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒருங்கிணைந்து எப்படி செயல்படுவது என்பது குறித்து ஆலோசித்தோம்.

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தை நடத்தியுள்ளோம். திமுக ஆட்சியை அகற்ற தமிழக மக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். சட்டசபை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.” இவ்வாறு அவர் கூறினார்.

Related News

Latest News