உடல் ஆரோக்கியத்திற்கும் நாம் சாப்பிடும் உணவுகளுக்கும் முக்கிய சம்மந்தம் இருக்கிறது, ஆனால் உணவு முறையில் மாற்றத்தை ஏற்படுத்தினால் மூளை வயதாவதைத் தடுக்க முடியும் என்று ஒரு புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது, ஒவ்வொரு வருடமும் நமது வயதோடு சேர்ந்து நமது உடல் உறுப்புகளின் வயதும் அதிகரிக்கிறது.
நமது வயதைக் குறைக்க முடியாது, ஆனால் நமது உடல் உறுப்புகளின் வயதைக் குறைக்க முடியும், உதாரணத்திற்கு 40 வயது நபர், ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கடைப்பிடிப்பதால் 30 வயது நபரின் உடலில் உறுப்புச் செய்பாட்டை பெற முடியும். அதுபோல ஆரோக்கியத்தை கெடுக்கும் வறுத்த மற்றும் பொரித்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதால் 25 வயது நபரின் உடல் உறுப்பு செயல்பாடுகள் 30 அல்லது 35 நபரின் செயல்பாடுகளைக் கொண்டு இருக்கும். இதுபோல மூளையின் வயதையும் குறைக்க முடியும்
Mediterranean diet என்று சொல்லக் கூடிய உணவு பழக்கத்தை கடைப்பிடிப்பதால் மூளை வயதாகும் செயல்பாடுகள் குறையும் என்று சொல்லப்படுகிறது, எனவே Mediterranean diet-ல் லீன் புரோட்டின் அதாவது நிறைவுற்ற கொழுப்பு இல்லாத உணவுகளான ஃபிரேஷ் காய்கறிகள், கடல் வகை உணவுகள், நவ தாணியங்கள், ஆலிவ் ஆயிலில் சமைத்த உணவுகள் ஆகும்
எனவே இஸ்ரேல் நாட்டில் உள்ள நெகேவ் பல்கலைக்கழகத்தில், இதுதொடர்பாக 102 நபர்களைக் கொண்டு ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது, ஆராய்ச்சி தொடங்கும் முன் முதலில் அவர்களுக்கு மூளையில் ஸ்கேன் எடுக்கப்பட்டது, பிறகு 18 மாதங்கள் தொடர்ந்து மூன்று வேளைகளுக்கும் Mediterranean diet உணவுகள் கொடுக்கப்பட்டது,
அதன் பின் செய்யப்பட்ட ரத்த பரிசோதனை, கல்லீரல் செயல்பாடுகள், உடலின் கொழுப்பு சத்து அளவு ஆகியவை பரிசோதிக்கப்பட்ட நிலையில், அனைவரின் உடல் எடையும் 2 கிலோ, மூளையின் வயதும் 1 அல்லது 2 வருடங்கள் குறைந்தது.