பழங்காலத்தில் பண்டமாற்று முறை என்கிற நடைமுறை இருந்து வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஒரு பொருளை வாங்க அதற்கு ஈடாக நம்மிடம் இருக்கும் மற்றொரு பொருளை கொடுக்க வேண்டும், இதுவே பண்டமாற்றும் முறையாகும். தெருவோர வியாபாரி ஒருவர் அதே முறையை கடைபிடிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.இந்த வீடியோவை யூடியூபில் உணவுப் பதிவர் விஷால் என்பவர் பகிர்ந்துள்ளார். புடியா கே பால் என்று பிரபலமாக அறியப்படும் பஞ்சு மிட்டாயை பிரதாப் சிங் என்கிற தெருவோர வியாபாரி முடியை வாங்கிக்கொண்டு பஞ்சு மிட்டாயை கொடுக்கிறார்.
அந்த வீடியோவில், கைநிறைய முடியுடன் நிறைய குழ்நதைகள் வரிசையாக வருகிறது. அவர்கள் அருகே சைக்கிளில் பின்னல் பஞ்சு மிட்டாய் தயாரிக்கும் இயந்திரத்தை வைத்துக்கொண்டு பிரதாப் சிங் பஞ்சு மிட்டாய் தயாரித்து கொண்டிருக்கிறார். அந்த குழந்தைகளிடம் அந்த வியாபாரி முடியை வாங்கிக்கொண்டு ரோஸ் நிறத்தில் இருக்கும் அந்த பஞ்சு மிட்டாய்களை அவர்களுக்கு வழங்குகிறார்.இந்த வித்தியாசமான பண்டமாற்று முறையை கண்டு பார்வையாளர்கள் பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.