உலக அரசியலில் ‘ட்ரம்ப் – ஈரான்’ இடையேயான பனிப்போர் இப்போ ஒரு விபரீதமான கட்டத்தை எட்டியிருக்கு. ஈரான் சமீபத்துல கொடுத்த சமாதானத் திட்டத்தை பார்த்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அதை “வெறும் குப்பை” (Piece of Garbage) அப்படின்னு சொல்லி நக்கலா தூக்கி வீசிட்டாரு. இப்போதைக்கு இருக்கிற அந்த ஒரு மாச போர் நிறுத்தம், ‘வென்டிலேட்டர்ல இருக்கிற நோயாளி’ மாதிரி ரொம்ப பலவீனமா இருக்குன்னு ட்ரம்ப் விமர்சிச்சது தான் இப்போ உலக லெவல்ல ஹாட் டாபிக்.
ட்ரம்ப்போட பிளான் என்னன்னா, ராணுவ பலத்தை காட்டி ஈரானை மண்டியிட வைக்கணும். ஆனா ஈரான் அதுக்கு சளைச்சவங்க இல்லை. “நாங்க ஹார்முஸ் நீர்சந்தியை மூடினா, உலகத்துக்கே பெட்ரோல் கிடைக்காது.. அப்போ தெரியும் எங்க அருமை”ன்னு ஈரான் பதிலுக்கு மிரட்டுது. இதனால அமெரிக்கால பெட்ரோல் விலை 50 சதவீதம் ஏறி, ஒரு கேலன் நாலரை டாலருக்கு மேல விக்குது. இதனால பாவம் அமெரிக்க மக்கள் தான் பெட்ரோல் பங்க்ல நின்னு கண்ணீர் விட்டுட்டு இருக்காங்க.
ஈரான் என்ன தான் கேக்குதுன்னு பார்த்தா, அவங்க லிஸ்ட் ரொம்ப பெருசுங்க. போரை நிறுத்தணும், தடையை நீக்கணும், எங்க பணத்தை திருப்பித் தரணும், அப்புறம் நஷ்ட ஈடு வேற கொடுக்கணுமாம்! இதை கேட்ட ட்ரம்ப், “நஷ்ட ஈடா? உங்களுக்கு நாங்க தரணுமா?”ன்னு கொதிச்சுப் போய், “ஈரான்ல இருந்து ஒரு பெரிய வெளிச்சம் வரும் பாருங்க”ன்னு ஏவுகணை தாக்குதலை மறைமுகமா எச்சரிச்சிருக்காரு.
ஆனா ட்ரம்ப்புக்கு ஒரு பக்கம் நவம்பர் மாசம் வரப்போற தேர்தல் பயம் இருக்கு. ஏன்னா அவரோட மக்கள் செல்வாக்கு இப்போ வெறும் 39 சதவீதமா குறைஞ்சிடுச்சு. 3-ல 2 அமெரிக்கர்களுக்கு ஏன் இந்த போர் நடக்குதுன்னே தெரியலையாம். இப்படி ஒரு பக்கம் அரசியல் குழப்பம், இன்னொரு பக்கம் பெட்ரோல் விலை உயர்வுன்னு ட்ரம்ப் இப்போ இக்கட்டான சூழல்ல இருக்காரு. இந்த சண்டை சமாதானத்துல முடியுமா? இல்ல உலகப்போர்ல முடியுமா? அப்படிங்குறத பொறுத்திருந்து தான் பாக்கணும்.
